×

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

புதுச்சேரி, மார்ச் 28: வில்லியனூர் அருகே சிறுமியை  கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரி, வில்லியனூர் அடுத்த பொறையூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பழனி மகன் பிரதீஷ் (23). இவர் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். அவ்வழியாக பேருந்தில் அடிக்கடி செல்லும் போது,  பள்ளிக்கு செல்லும்  17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார்.அப்போது சிறுமி வேறு சிலருடன் பழகுவதாக கூறி அவ்வப்போது தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு சம்பவத்தன்று சிறுமியை பொறையூரில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு பிரதீஷ் அழைத்துள்ளார். தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு பொறையூரில் உள்ள பிரதீஷ் வீட்டுக்கு சிறுமி சென்றுள்ளார். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு சிறுமியை அழைத்து சென்று, தன்னைத் தவிர வேறு யாருடனும் பழகவில்லை என சத்தியம் செய்யுமாறு பிரச்னை செய்தார்.  அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதீஷ் அங்கு கிடந்த மது பாட்டிலால் சிறுமியை பலமாக தாக்கினார். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சிறுமியின் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி, சவுக்கு தோப்பில் வீசி விட்டு தப்பி சென்று விட்டார்.  சிறுமியின் குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிந்து பிரதீஷை கைது செய்தனர்.  புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்து, தலைமை நீதிபதி செல்வநாதன் நேற்ற  தீர்ப்பு வழங்கினார்.  இதில் குற்றம் சாட்டப்பட்ட பிரதீஷ்க்கு ஆயுள் தண்டனையும் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தார்.  அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறையும் அளித்து  உத்தரவிட்டார்.  மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் நிதி  வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தார்….

The post பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Pocso ,Villianur ,
× RELATED கடலூர்- புதுச்சேரி எல்லைப் பகுதியில்...