- பிரித்விராஜ்
- கரீனா கபூர்
- பிரித்விராஜ் சுகுமாரன்
- ச.
- ராஜமௌலி
- பிரியங்கா சோப்ரா
- மகேஷ் பாபு
- மேக்னா குல்சார்

பாடகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான பிருத்விராஜ் சுகுமாரன், தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் முன்னாள் உலக அழகியும், பாடகியுமான பிரியங்கா சோப்ரா நடித்து வரும் ‘வாரணாசி’ என்ற படத்தில் நடிப்பதுடன், இந்தியில் ‘தாய்ரா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை ‘சாம் பகதூர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மேக்னா குல்சார் இயக்குகிறார். ‘தாய்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முக்கிய கேரக்டரில் கரீனா கபூர் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்த ஆண்டு திரைக்கு வரும் இதில், முதல்முறையாக பிருத்விராஜ் சுகுமாரன், கரீனா கபூர் இணைந்து நடித்துள்ளனர்.
இதுவரை கரீனா கபூர் நேரடி தமிழ் படத்தில் நடித்தது இல்லை. ஆனால், அவரது அக்கா கரீஷ்மா கபூர், தமிழில் எபி குஞ்சுமோன் நடித்த ‘கோடீஸ்வரன்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி இருந்தார். ஆனால், பைனான்ஸ் பிரச்னையால் பல வருடங்களாக அப்படம் திரைக்கு வரவில்லை. கே.டி.குஞ்சுமோன் தயாரிக்க, ஹீரோயினாக சிம்ரன் நடித்தார். முன்னதாக ஹீரோயினாக நடிக்க பிரீத்தி ஜிந்தா, ரீமாசென், ஜோதிகா ஆகியோரிடம் படக்குழு பேசியிருந்தது. ஹீரோவாக நடிக்க விஜய், அஜித் குமார் ஆகியோரிடம் கதை சொல்லப்பட்டது. பிறகு விஜய் நடிக்க முடிவானது.
இந்நிலையில், தனது மகன் எபி குஞ்சுமோனை ஹீரோவாக அறிமுகப்படுத்த விரும்பிய கே.டி.குஞ்சுமோன், விஜய்யை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ராஜசேகர், மணிவண்ணன், பி.வாசு ஆகியோரிடம் 38 படங்களுக்கு மேல் உதவியாளராக பணியாற்றிய நந்தகுமார் என்பவர் ‘கோடீஸ்வரன்’ படத்தை எழுதி இயக்கினார்.

