×

பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளியை கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையம் 4,970 ஏக்கர் பரப்பில் பரந்தூரில் அமைகிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. பரந்தூர் விமான நிலையத்துக்காக 13 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விமான நிலையத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான பூர்வாங்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்பம், பொருளாதார அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகர்களை வரவேற்று டிட்கோ விளம்பரம் செய்துள்ளது. விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம் இடையேயான சாலை, ரயில் போக்குவரத்தை ஆய்வு செய்ய வேண்டும். விமான நிலையங்கள் தொடர்பாக ஆய்வு வழங்கும் நிறுவனங்கள் ஜனவரி 6ம் தேதிக்குள் ஒப்பந்த புள்ளியை அனுப்ப வேண்டும். ஆலோசனை நிறுவனங்களிடம் இருந்து வரும் ஒப்பந்தப்புள்ளிகள் ஜனவரி 6ம் தேதி திறக்கப்படும். 2669 – 70ம் நிதியாண்டு வரை எதிர்கால போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. …

The post பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளியை கோரியது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Bharandur Airport ,Chennai ,Tamil Nadu Industry Development Agency ,Paranthur Airport Development ,Dinakaran ,
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...