×
Saravana Stores

விவாகரத்து செய்தி பரவி வரும் நிலையில் மீண்டும் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய்

மும்பை: பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், இந்திய திரையுலகின் முன்னணி நடிகையும் மற்றும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயும் கடந்த சில மாதங்களாக விவாகரத்து செய்தியில் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றனர். இதுபற்றி இருவரும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில், மீண்டும் ஐஸ்வர்யா ராய் நடிக்க வந்திருக்கும் நிலையில், தற்போது ஒரு நபருடன் இணைந்து போஸ் கொடுத்துள்ள அவரது போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த நபர், ஐஸ்வர்யா ராயின் ஒப்பனைக்கலைஞர். நேற்று அவர் ஐஸ்வர்யா ராயுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களைப் பகிர்ந்துள்ளார். ஆனால், அந்த அரங்கில் நடந்த படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்று இருந்தாலும், அது திரைப்படம் இல்லை என்றும், ஒரு விளம்பரத்துக்கான படப்பிடிப்பு என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Aishwarya Rai ,Mumbai ,Bollywood ,Abhishek Bachchan ,
× RELATED ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் உறவில்...