×
Saravana Stores

யோகி பாபுவுடன் இணையும் 3 ஹீரோயின்கள்

சென்னை: வர்க்கிங் ஹவுஸ் புரொடக்ஷன் தயாரிக்கும் படம் ‘பரலோகத்தில் இருக்கும் பரம பிதா’. ஹீரோவாக யோகி பாபு நடிக்கிறார். ஹீரோயின்களாக சிம்ரன், சௌமியா, பிரியா நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பிரபல நடிகர், நடிகைகள் இதில் இணைகிறார்கள். முருகேஸ்வர காந்தி படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு, கவுதம். இசை, ஜெஃப்ரி. ‘பூஜையுடன் படம் துவங்கப்பட்டுள்ளது. இதுவரை பார்க்காத புதிய தோற்றத்துடன் இந்த படத்தில் யோகி பாபு நடிக்கிறார். அவருடன் மூன்று கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படம் நல்ல கதைக்களம் கொண்ட காமெடி படமாக இருக்கும். யோகி பாபு அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்’ என்றது படக்குழு. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Tags : Yogi Babu ,CHENNAI ,Working ,Productions ,Simran ,Soumya ,Priya ,Murugeswara Gandhi ,
× RELATED ஒரே ஹாலிவுட் படத்தில் யோகி பாபு, நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ்