×

கங்குவா திரைப்படத்தில் 12 நிமிட காட்சிகள் நீக்கம்!

கங்குவா திரைப்படத்தில் இடம்பெற்ற 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே, நடிகை ஜோதிகா படம் குறித்து விளக்கமான பதிவை வெளியிட்டு நெகடிங் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இப்பதிவு வைரலானதுடன், கவனத்தையும் பெற்றது. அதேநேரம், ரசிகர்கள் தரப்பிலிருந்து படத்தின் வசனம் மற்றும் பின்னணி இசை சற்று பாதகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதை கருத்தில் எடுத்துக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் கங்குவா படத்தில் இடம்பெற்ற நிகழ்கால காட்சிகளிலிருந்து 12 நிமிடத்தை நீக்கியுள்ளது. இதனால், 2 மணி 22 நிமிடங்கள் ஓடக்கூடிய கங்குவாவின் புதிய வடிவம் விரைவில் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாளில் சில எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்த கங்குவா, தற்போது ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Jyotika ,
× RELATED திட்டமிட்டு அவதூறு பரப்புவதா?: ஜோதிகா ஆவேசம்