பெங்களூரு: ‘காந்தாரா’ படத்தின் முதல் பாகம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. இப்படம் வெறும் ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவாகி, உலகம் முழுவதும் ரூ.450 கோடி வசூலித்தது. கன்னட சினிமாவில் இது பெரும் சாதனையாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் இனிமேல்தான் வெளியாகும் என்று ரிஷப் ஷெட்டி அறிவித்தார். அதன்படி ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் ‘காந்தாரா சாப்டர் 1’ என்ற படத்தை ரிஷப் ஷெட்டி தொடங்கிவிட்டார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதை அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று வெளியிட படக்குழு முடிவு செய்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.