×

துபாயில் அஜித்துக்கு விருந்து தந்த மாதவன்

துபாய்: துபாயில் அஜித்துக்கு தடபுடல் விருந்து கொடுத்திருக்கிறார் நடிகர் மாதவன்.அஜித்தும் மாதவனும் நல்ல நண்பர்கள். அஜித் கார் ரேஸில் ஆர்வம் கொண்டவர். ரேஸராகவும் உள்ளார். அதுபோல் மாதவனின் மகன் நீச்சல் விளையாட்டில் பல பதக்கம் வென்றிருக்கிறார். அதனால் அஜித்தும் மாதவனும் சந்திக்கும்போது விளையாட்டுத்துறை பற்றி நிறைய பேசுவார்கள். துபாயில் மாதவனுக்கு வீடு இருக்கிறது. கார் ேரஸில் பங்கேற்பதற்காக அஜித்தும் துபாயில் தங்கியிருக்கிறார். இது பற்றி அறிந்த மாதவன், அஜித்தை டின்னருக்கு அழைத்திருக்கிறார்.

உடனே அஜித்தும் அவரது அழைப்பை ஏற்று, துபாயிலுள்ள மாதவனின் வீட்டுக்கு சென்றார். அங்கு மாதவனின் உறவினர்கள், நண்பர்கள் பலரும் அஜித்தை வரவேற்றனர். பிறகு அனைவரும் சேர்ந்து அஜித்துக்கு தடபுடல் விருந்து கொடுத்து அசத்தினர். இது தீபாவளியையொட்டி நடந்த சந்திப்பாக எடுத்துக்கொள்ளலாம் என மாதவன் தரப்பு தெரிவித்துள்ளது. கார் ரேஸில் வெற்றி பெற அஜித்துக்கு மாதவன் வாழ்த்தும் தெரிவித்தார்.

 

Tags : Madhavan ,Ajith ,Dubai ,
× RELATED Ajith sir car revealed for 24HSeries. | #AK #Ajith #Ajithkumar |