- ஜி.வி. பிரகாஷ்
- சுதா கொங்கரா
- சிவகார்த்திகேயன்
- சென்னை
- ஜி.வி. பிரகாஷ் குமார்
- தீபாவளி விழா
- அமரன்
- சாய் பல்லவி
- துல்கர் சல்மான்
- மீனாட்சி சவுதேரி
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு தமிழில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளியான ‘அமரன்’, தெலுங்கில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடித்து வெளியான ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். 2 படங்களிலும் அவரது பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியுடன் காணப்படும் அவருக்கு இயக்குனர் சுதா கொங்கரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அபிமான இசை அமைப்பாளர், எனது தம்பி தீபாவளிக்கு ஒன்றல்ல, இரு அற்புதமான பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார். ‘அமரன்’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களில் அவரது பின்னணி இசை, பாடல்கள் அருமையாக இருந்தது. அவரது 100வது படத்தில் பணிபுரிய ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.
அவருக்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ் குமார், ‘நன்றி சகோதரி. நாம் இணைந்து பணிபுரியும் எனது 100வது படம் சிறப்பாக இருக்கும். எனது முதல் தேசிய விருது, நீங்கள் இயக்கிய ‘சூரரைப்போற்று’ படத்தின் மூலமாக கிடைத்தது. அதற்கான எனது நன்றியை 100வது படத்தில் திருப்பி தருவேன்’ என்றார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ என்ற படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இது அவரது இசைஅமைப்பில் உருவாகும் 100வது படமாகும்.