×
Saravana Stores

சிரஞ்சீவியின் விஸ்வம்பரா டீசர் வெளியீடு

ஐதராபாத்: வசிஷ்டா எழுதி இயக்க, சிரஞ்சீவி நடிக்கும் பான் இந்தியா படம், ‘விஸ்வம்பரா’. யுவி கிரியேஷன்ஸ் சார்பில் விக்ரம், வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் பிரமாண்டமான இப்படத்தின் டீசர், தசரா பண்டிகையையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிரஞ்சீவி இளமையாகவும், வசீகரமாகவும் தோன்றுகிறார், ஃபேண்டஸி சாகசங்கள் நிறைந்த கதை கொண்ட இப்படத்தில் திரிஷா, ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர் நடிக்கின்றனர். ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இசை அமைக்க, சோட்டா கே.நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி எடிட்டிங் செய்கின்றனர். ஸ்ரீசிவசக்தி தத்தா, சந்திரபோஸ் பாடல்கள் எழுதுகின்றனர்.

The post சிரஞ்சீவியின் விஸ்வம்பரா டீசர் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chiranjeevi ,Hyderabad ,Vashishtha ,Vikram ,Vamsi ,Pramod ,UV Creations ,Dussehra ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED CRPF பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்!!