ஊத்தங்கரை, ஜூலை 19: ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு வளத்தானூர் பகுதியை சேர்ந்தவர் பழனி(40). இவரது மனைவி சரசு(38). இவர்கள் திண்டிவனம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றிய போது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 4 குழந்தைகள் உள்ளனர். தற்போது ஊத்தங்கரை அடுத்த அருணபதி எம்ஜிஆர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தம்பதி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தனது அண்ணனை பார்த்து வருவதாக கூறிச்சென்ற சரசு. திரும்பி வரவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடிய வில்லை. இதுபற்றி பழனி, ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post காதல் மனைவி திடீர் மாயம் appeared first on Dinakaran.
