நாமக்கல், ஜூலை 19: நாமக்கல்லில் இன்று நடைபெறும் மாவட்ட அளவிலான வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு கலந்து மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல், மாநகராட்சி திருமண மண்டபத்தில் இன்று(19ம் தேதி) காலை 10 மணிக்கு ‘அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை குறித்த தொழில்நுட்பங்களை விளக்கவும், புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை கொண்டு அரங்கம் அமைத்து காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இதில் கோவை நம்மாழ்வார் அங்கக வேளாண்மை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், லத்துவாடி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் நாமக்கல் வேட்டாம்பாடி, பி.ஜி.பி வேளாண் அறிவியல் கல்லூரி சேர்ந்த முதல்வர் ஆகியோர்களை கொண்டு விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலிருந்தும் விவசாயிகளை கண்காட்சிக்கு அழைத்துச்செல்ல பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும். இவ்வா று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம் appeared first on Dinakaran.
