×

தாவரவியல் பூங்கா சிறிய புல் மைதானம் சீரமைப்பு

 

ஊட்டி,ஜூலை17: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள சிறிய புல் மைதானம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.  ஊட்டி தாவரவியல் கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சியை முன்னிட்டு கடந்த இரு மாதங்களுக்கு முன் பூங்கா தயார் செய்யப்பட்டது.புல் மைதானங்கள் பச்சை பசேல் என காட்சி அளித்தது. இந்நிலையில், கோடை விடுமுறையின் போது ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இவர்கள் ஊட்டியில் நடந்த மலர்கள் காட்சியை கண்டு ரசித்து சென்றனர்.

கடந்த மே மாதம் 15ம் தேதி மலர் கண்காட்சி துவங்கிய போது, ஊட்டியில் மழையும் துவங்கியது.இந்த மழை சுமார் 10 நாட்களுக்கு மேல் நீடித்தது. இதனால்,பூங்காவும், புல் மைதானமும் சேறும் சகதியுமாக மாறியது. இந்நிலையில் மழை ஓய்ந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக தற்போது சிறிய புல் மைதானம் மூடப்பட்டது.

புல் மைதானத்தில் வளர்ந்துள்ள புற்கள் முழுமையாக அகற்றி சமன் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும்,சில இடங்களில் புதிதாக பொருட்கள் பதிக்கப்பட்டு அவைகளை பராமரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இதனால் இந்த புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

The post தாவரவியல் பூங்கா சிறிய புல் மைதானம் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Garden ,Ooty ,Ooty Botanical Garden ,Ooty Botanical Summer Season ,Flower Exhibition ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...