×

குளம் தூர் வருவதாக கூறி முரம்பு மண் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்: 2 பேர் கைது

ஆரணி, ஜூலை 16: ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள புங்கம்பாடி கிராமத்தில் குளத்தை தூர்வருவதாக கூறி முரம்பு மண் கடத்தி விற்பனை செய்வதாக ஆரணி ஆர்டிஓவுக்கு தகவல் கிடைத்தது. ஆர்டிஓ சிவா தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் புங்கம்பாடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள குளத்தில் உரிய அனுமதியின்றி தூர் வருவதாக கூறி டிராக்டர்களில் முரம்பு மண் கடத்தி தெரியவந்தது. உடனே ஆர்டிஓ சிவா இரண்டு டிராக்டர்களை பிடித்து களம்பூர் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து ஆர்டிஓ சிவா களம்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் டிராக்டரில் முரம்பு மண் கடத்திய இருவரும் அணியாலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் (32), அரவிந்தன் (30), என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து, ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post குளம் தூர் வருவதாக கூறி முரம்பு மண் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Arani ,Arani RTO ,Pungambadi ,Kalampur ,RTO ,Siva ,Dinakaran ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...