×

பீகார் மேலவையில் கடும் வாக்குவாதம் முதல்வர் நிதிஷ் மனநிலை சரியில்லாதவர்: தேஜஸ்வி யாதவ் காட்டம்

பாட்னா: பீகார் சட்டமேலவை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியை சேர்ந்த எம்எல்சி சஷி யாதவ், “தான் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அரசு அளித்த பதிலில் திருப்தியில்லை” என்றார். இதற்கு முதல்வர் நிதிஷ் குமார், “பீகாரில் முந்தைய அரசாங்கங்கள் எதையும் செய்யவில்லை. ஆனால் எங்கள் அரசாங்கம் நிறைய செய்துள்ளது” என்று பதிலளித்தார்.

இதற்கு முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, “அப்போது நீங்கள் பொறுப்பேற்கும்முன் மாநிலத்தில் எதையும் செய்யவில்லை என சொல்கிறீர்கள். எங்கள் ஆட்சியின் பதிவுகளை நீங்கள் பார்த்தால் எந்தெந்த திட்டங்கள் செய்யப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்” என கூறினார். பின்னர் ராப்ரி தேவி எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “மனநிலை சரியில்லாத முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்தார்.

The post பீகார் மேலவையில் கடும் வாக்குவாதம் முதல்வர் நிதிஷ் மனநிலை சரியில்லாதவர்: தேஜஸ்வி யாதவ் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Bihar Legislative Council ,Chief Minister ,Nitish ,Tejashwi Yadav ,Patna ,Bihar ,Legislative Council ,Rashtriya Janata Dal ,RJD ,MLC ,Shashi Yadav ,Nitish Kumar ,
× RELATED மொபைல் போனை தொடர்ந்து...