×

திருப்பதி கோயில் பூட்டை திறப்பது போல் வீடியோ யூடியூபர் டிடிஎப் வாசன் வங்கி கணக்கு முடக்கம்: ஆந்திரா போலீசார் நடவடிக்கை

திருமலை: யூடியூப் மூலம் பிரபலமாகி சர்ச்சைக்கு உண்டான டி.டி.எப்.வாசன் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது டி.டி.எப். வாசன் மற்றும் அவரது நண்பர்கள் சுவாமி தரிசனத்திற்கான வரிசையில் செல்லும் போது, தேவஸ்தான ஊழியர்கள் போன்று பூட்டை திறப்பது போல் நடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதுகுறித்து திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டிடிஎப் வாசனின் வழக்கறிஞர் முத்து திருப்பதி திருமலையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘டிடிஎப் வாசனின் வங்கி கணக்கை திருமலை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.

The post திருப்பதி கோயில் பூட்டை திறப்பது போல் வீடியோ யூடியூபர் டிடிஎப் வாசன் வங்கி கணக்கு முடக்கம்: ஆந்திரா போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Tirupati ,Andhra Pradesh ,Tirumala ,DTF ,Vasan ,YouTube ,Tirupati Ezhumalaiyan ,Swami ,
× RELATED வேற்று மதத்தை சேர்ந்த தேவஸ்தான...