வேலூர்: வேலூர் எம்பி கதிர்ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் அமலாக்கத்துறையினர் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர். வேலூர் எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான வீடு, அவருக்கு சொந்தமான கல்லூரி மற்றும் உறவினரான பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது உறவினர் தாமோதரன் வீடு ஆகிய 4 இடங்களில் கடந்த 3ம் தேதி. 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் சோதனையை தொடங்கினர்.
இந்த சோதனை கடந்த 5ம் தேதி அதிகாலை 2.15 மணியளவில் நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் சோதனை நடத்துவதற்காக மதியம் 1 மணியளவில் அமலாக்கத்துறையினர் காட்பாடி காவல் நிலையத்தில் கடிதம் அளித்தனர். இதை தொடர்ந்து பகல் 1.15 மணியளவில் 8 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், வேலூர் எம்பிக்கு சொந்தமான கல்லூரியில் நுழைந்தனர். உடனடியாக நுழைவு கேட் மூடப்பட்டது. இதனால் காட்பாடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post வேலூர் எம்பி கல்லூரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை appeared first on Dinakaran.