×

பொங்கல் நெருங்கும் நிலையில் கே.வி.குப்பம் ஆட்டு சந்தையில் விற்பனை அமோகம்: வியாபாரிகள் மகிழ்ச்சி


கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை யன்று ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்நிலையில் திங்கட்கிழமயான நேற்று காலை வழக்கம்போல் கடும் பனிபொழிவிலும் சந்தை கூடியது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் லோடு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. இதில் ஏராளமான வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தனர். ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. வெள்ளாடுகள், முத்து கிடாய் ரகங்கள், நாட்டு ரக கிடாய்கள், செம்மறி ஆடுகள் என பல்வேறு ரகங்கள் கொண்ட ஆடுகள் அதிகம் கொண்டுவரப்பட்டிருந்தது.

கடந்த வாரம் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகிய விழாக்கள் முன்னிட்டு சந்தை சிறப்பாக நடைபெற்ற நிலையில், தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நேற்று நடைபெற்ற சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற சந்தையில் ஒரு ஆடு ரூ20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட விலை கூடுதலாகவும் இரட்டிப்பாகவும் சில ஆடுகள் விற்கப்பட்டது. தொடர்ந்து ஆட்டின் விலை கூடுதலாக விற்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமான சந்தையை விட நேற்று நடைபெற்ற சந்தை நல்ல லாபம் கிடைத்ததாகவும் இதே நிலை பொங்கல் முன்னதாக நடைபெறும் திங்கள் கிழமை சந்தையிலும் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பொங்கல் நெருங்கும் நிலையில் கே.வி.குப்பம் ஆட்டு சந்தையில் விற்பனை அமோகம்: வியாபாரிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : K.V. Kuppam ,Vellore district ,Karnataka ,Pongal ,Dinakaran ,
× RELATED வேலூர் அருகே சிறுத்தை தாக்கி பெண் உயிரிழப்பு?