மதுரை, ஜன. 5: புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளலூரை சேர்ந்தவர் ரமேஷ்(40). இவரது உறவினர் மதுரை, கோ.புதூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பார்த்து நலம் விசாரிப்பதுடன், சிகிச்சைக்கு தேவைப்படும் பணத்தை கொடுக்க ரமேஷ் மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர் அவர் இரவில் புறப்பட்டபோது, கோ.புதூரில் பேருந்திற்கு காத்திருந்தார்.
அப்போது இரு டூவீலர்களில் வந்த 4 பேர், ரமேஷை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாகக்கூறி அழைத்தனர். அவர்கள் கூறியதை நம்பி அவரும் ஒரு டூவீலரில் ஏறினார். வழியில் டூவீலர்களை நிறுத்திய அவர்கள், ரமேஷின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் கோ.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வில்லாபுரத்தைச் சேர்ந்த பூபதிராஜ்(18), கோ.புதூரை சேர்ந்த தர்மராஜ்(18) உட்பட நான்கு பேரை கைது செய்ததுடன், செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
The post செல்போன் பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.