தியாகராஜநகர், ஜன.4: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஜனவரி மாத மின்வாரியம் சார்ந்த குறை தீர் கூட்டம் நடைபெறும் நாட்கள், இடம் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் வருகிற 7ம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 10ம் தேதி நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 17ம் தேதி நெல்லை நகர்புற கோட்ட அலுவலகத்திலும் குறை தீர் கூட்டம் நடைபெறும். இதுபோல் 21ம்தேதி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும், 24ம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும்,, 28ம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அனைத்து கூட்டங்களும் பகல் 11 மணிக்கு தொடங்கும் என நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
The post நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஜனவரி மாத மின் குறைதீர் கூட்ட தேதிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.