×

டெல்லி தேர்தல் தேதி அறிவிக்க உள்ள நிலையில் திட்டங்களை வாரி வழங்கும் ஒன்றிய பாஜக அரசு: எதிர்கட்சிகள் விமர்சனம்


புதுடெல்லி: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டெல்லியில் பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை மீண்டும் தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி போராடி வருகிறது. மக்களவை தேர்தலை போன்று ெடல்லி தேர்தலிலும் காங்கிரஸ் – ஆம்ஆத்மி கூட்டணி அமையும் என்று எதிர்பார்த்த நிலையில், இரு கட்சிகளும் தனித்து ேபாட்டியிடுவதாக அறிவித்துள்ளன. அதேநேரம் டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டெல்லி அசோக் விஹாரில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் குடிசைப்பகுதி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ஜுகி ஜோப்ரி (ஜே.ஜே) வீடுகளில் வசிப்பவர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு மோடி வழங்குகிறார். அதேபோல் நவுரஜி நகரில் உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் பொதுத் தொகுப்பு (ஜிபிஆர்ஏ) வகை-2 குடியிருப்புகள் ஆகிய திட்டங்களையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

துவாரகாவில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டுள்ள சிபிஎஸ்இ-யின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தையும் திறந்து வைக்கிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான மூன்று புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் நஜாஃப்கரின் ரோஷன்புராவில் கல்விக்கான அதிநவீன வசதிகளைக் கொண்ட வீர சாவர்க்கர் கல்லூரி கட்டுவதற்கான பணிகளை ெதாடங்கி வைக்கிறார். டெல்லிக்கு விரைவில் தேர்தல் அறிவிக்க உள்ள நிலையில், பல்வேறு திட்டங்களை பாஜக அரங்கேற்றி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

The post டெல்லி தேர்தல் தேதி அறிவிக்க உள்ள நிலையில் திட்டங்களை வாரி வழங்கும் ஒன்றிய பாஜக அரசு: எதிர்கட்சிகள் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,EU BJP government ,New Delhi ,Assembly ,Modi ,Dinakaran ,
× RELATED பாலியல் உறவு என்ற வார்த்தை மட்டுமே...