×

பைக் மீது லாரி மோதி விபத்து கல்லூரி மாணவன் பலி: உடன் சென்ற தாய் படுகாயம்

 

திருவள்ளூர், ஜன. 1: திருவள்ளூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் அவருடன் சென்ற தாய் படுகாயம் அடைந்தார். திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சந்தோஷ் திருவள்ளூர் அடுத்த பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது தாய் கீதாவுடன் ராமதண்டலம் கிராமத்திற்குச் சென்றுவிட்டு, பைக்கில் சந்தோஷ் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ராமதண்டலம் கிராமத்தில் இருந்து புறப்பட்டபோது எம்சாண்ட் ஏற்றி வந்த லாரி ஒன்று சந்தோஷ் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவன் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த அவரது தாய் கீதா திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த புல்லரம்பாக்கம் போலீசார் சந்தோஷின் சடலத்தை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவன் விபத்தில் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பைக் மீது லாரி மோதி விபத்து கல்லூரி மாணவன் பலி: உடன் சென்ற தாய் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Ezhumalai ,Velliyur ,Santosh… ,
× RELATED உளுந்தூர்பேட்டையில் சினிமா பாணியில் மதுபாட்டில்களை கடத்தியவர் கைது