×

செங்குன்றம் அருகே டீக் கடை எரிந்தது

புழல்: சென்னை செங்குன்றம் அடுத்த விளாங்காடுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுகாவூர் பத்மாவதி நகர் அருமந்தை பிரதான சாலையை சேர்ந்தவர் துரைராஜ் (58). இவர் வீட்டின் முன் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு கடையை மூடிவிட்டு சென்றபோது நள்ளிரவில் கடை தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைத்தனர். இருப்பினும் டீக்கடையில் இருந்த பிரிட்ஜ் மற்றும் பாத்திரங்கள் சேதமானது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் மற்ற பகுதிகளுக்கு பரவவில்லை. இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post செங்குன்றம் அருகே டீக் கடை எரிந்தது appeared first on Dinakaran.

Tags : Sengunram ,Durairaj ,Arumanthai Main Road ,Padmavati Nagar ,Sirukavur ,Vilankaduppakkam Panchayat ,Sengunram, Chennai ,
× RELATED செங்குன்றம் அருகே டீ கடையில் தீ விபத்து