- ராஜகோபால சுவாமி கோயில்
- செம்பனர்கோயில்
- ஆதி
- நாராயண பெருமாள் தேவஸ்தானம் ராஜகோபாலா
- சுவாமி
- கோவில்
- இந்து மதம் மானியங்கள் திணைக்களம்
- அக்கூர்
- மயிலாதுதுரை மாவட்டம்
- ராஜகோபால பெருமாள்
- மாதவப் பெருமாள்
- ஆஞ்சநேயர்
- தெய்வம்
- தேவி
- பூதேவி
செம்பனார்கோயில், டிச.31: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற ஆதிநாராயணப்பெருமாள் தேவஸ்தானம் ராஜகோபால சாமி கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி தேவி, பூதேவி உடனாகிய ராஜகோபால பெருமாள், மாதவ பெருமாள், ஆஞ்சநேயர் ஆகிய சாமிகளுக்கு பால், பன்னீர் இளநீர், சந்தனம், திரவிய பொடி, மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் கோயிலில் உள்ள கோதண்டராமர், கருடாழ்வார் உள்ளிட்ட சாமி சன்னதிகளிலும் அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள், சாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர் இந்த வழிபாட்டில் சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post செம்பனார்கோயில் அருகே ராஜகோபால சாமி கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.