×

செதலவாடி ஊராட்சியில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க கூட்டம்

 

அரியலூர், டிச. 28: அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் செதலவாடி ஊராட்சியில், திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு செந்துறை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் செதலவாடி ஊராட்சி மன்ற தலைவர் வரவேற்றார்.

திமுக தலைமைக் கழக பேச்சாளர்கள் போடி. காமராஜ், இளம் பேச்சாளர் பரமேஸ்வரன் ஆகியோர் தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு திராவிட மாடல் அரசின் மகளிர் விடியல் பயணம், நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம் , மகளிர் உரிமைத் தொகை, தமிழ் முதல்வன் உள்ளிட்ட மக்கள் நல திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில், செந்துறை தெற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவர் சாமி தட்சணாமூர்த்தி, திமுக மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ராமராஜன், செந்துறை தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமணி, மற்றும் திமுக நிர்வாகிகள் மணிகண்டன், ஆதி இளங்கோவன், இளஞ் செழியன், காளமேகம், சிகாமணி, அன்பரசி, கலைச் செல்வி, ஆனந்த், தர்மராஜ், சுந்தர், பன்னீர் உள்ளிட்ட மாவட்ட , ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post செதலவாடி ஊராட்சியில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Dravidian Model Government Achievements ,Sethalavadi Panchayat ,Ariyalur ,Senthurai Union ,Ariyalur District ,Dravidian Model Government ,DMK ,Selvaraj ,Senthurai South Union ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் சீர்மரபினர்...