×

விவசாயிகள் இணை தொழிலாக மீன் வளர்த்து வருமானம் ஈட்டலாம்

சிவகங்கை, டிச.27: விவசாயத்துடன் இணை தொழிலாக மீன் வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தில் விதைகள், உரங்கள், வேளாண் உபகரணங்கள், பண்ணைக் குட்டைகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன் தற்பொழுது ஊரக வளர்ச்சித் துறையுடன் ஒருங்கிணைந்து தரிசு நிலங்கள் சீரமைத்து விவசாயிகளுக்கு விளை நிலங்களாக மாற்றி கொடுக்கப்படுகிறது.  தோட்டக்கலைத் துறையின் மூலம் அரசு மானியத்தில் பலவகை மரக்கன்றுகள் வழங்குவதுடன் நூண்ணீர் பாசன திட்டம், பண்ணைக்குட்டை அமைத்தல் போன்ற திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயப் பணிகள் குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. மற்ற காலத்தில் இணைத்தொழிலாக பண்ணைக்குட்டையில் மீன் வளர்த்தால் ஆறு மாதத்தில் குறைந்தது ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50லட்சம் வரை லாபம் பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மைத் துறை மற்றும் அதன் ஒருங்கிணைந்த துறைகள் மூலம் அரசு வழங்கும் மானியத் திட்டம் குறித்து அறிந்து விவசாயிகள் பயன்பெற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விவசாயிகள் இணை தொழிலாக மீன் வளர்த்து வருமானம் ஈட்டலாம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Agriculture Department ,Dinakaran ,
× RELATED திறன் மேம்பாட்டு பயிற்சி