×

பைக்கில் கடத்தி வரப்பட்ட போதை ஸ்டாம்புகள் பறிமுதல்

அம்பத்தூர்: வில்லிவாக்கம், சிட்கோ நகர் 4வது மெயின் ரோட்டில் போதைப்பொருள் விற்பதாக, வில்லிவாக்கம் காவல் ஆய்வாளருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் மேற்கண்ட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள காமாட்சி அம்மன் கோயில் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, போதைப்பொருள் இருந்தது. விசாரணையில், அம்பத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த அர்வின், (29) என்பது தெரிந்தது. அவரிடமிருந்து 3.2 கிராம் மெத்தாம்பெட்டமின், 3 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை பவுடர், 2 போதை ஸ்டாம்புகள், செல்போன், லேப்டாப், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

The post பைக்கில் கடத்தி வரப்பட்ட போதை ஸ்டாம்புகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Villivakkam ,4th Main Road ,Citco Nagar, Villivakkam ,Kamakshi Amman temple ,
× RELATED பைக்கில் கடத்தி வரப்பட்ட போதை ஸ்டாம்புகள் பறிமுதல்