×

மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி; கத்திவாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி

திருவொற்றியூர்: தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், சென்னை வருவாய் மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டி, எண்ணூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சென்னையின் உள்ள அரசு பள்ளியில் இருந்து 14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட 2 ஆண்கள் பிரிவிலும் எண்ணூரில் உள்ள கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற 2 அணிகளும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மதுரை மற்றும் தேனியில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி தலைமை ஆசிரியை அனிதா உடற்பயிற்சி கல்வி ஆசிரியை, பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி; கத்திவாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Kathivakkam government school ,Tamil Nadu School Education Department ,Chennai Revenue District ,Ennore Government Higher Secondary School ,Chennai ,
× RELATED பள்ளிகளில் NGO-க்கள் செயலாற்ற விரும்பினால் சிஇஓ அனுமதி தேவை