×

மார்கழி மாதமும் பரங்கிப்பூவும்!

மார்கழி மாதத்தை பீடை மாதம் எனக் கூறுவர். அதேசமயம் நிரந்தர வாசம் செய்ய லட்சுமியை அழைப்பது எப்படி?

365 நாட்களும் வாசல் தெளித்து கோலம் போடுவது நம்முடைய பாரம்பரிய வழக்கம். அதில் மார்கழி மாதம் முப்பது நாட்கள் மட்டும் வாசல் மொழுகி கோலம் போட்டு அதில் பரங்கிப் பூ வைப்பதை வழக்கமாக கடைபிடித்து வருகிறார்கள்.சிலர் கோலத்தின் நடுவில் சாணம் வைத்து அதில் பரங்கிப் பூவை வைப்பர். பீடை மாதத்திற்கு செய்யப்படும் பரிகாரம் என்று குறிப்பிடுகிறார்கள். காரணம், பரங்கிப் பூ இருக்கும் வீட்டை பீடை நெருங்காதாம். மாறாக லட்சுமி வருவதாக ஐதீகம்.

திருப்பாவை… திருவெம்பாவை பாடல்களை பாடி, வெண் பொங்கல் வைத்து, நைவேத்யம் செய்து வீட்டினர் பகிர்ந்து சாப்பிடுவர். வெள்ளிக்கிழமைகளில் வெண் பொங்கலுடன் சர்க்கரை பொங்கலும் செய்து நைவேத்யம் செய்வர்.கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் அமைய, பாவை நோன்பு இருப்பர்.

– ராஜிராதா, பெங்களூரூ.

The post மார்கழி மாதமும் பரங்கிப்பூவும்! appeared first on Dinakaran.

Tags : Marghazi ,Lakshmi ,Maragzhi ,Parankipu ,
× RELATED ?மார்கழி மாதத்தில் நிச்சயதார்த்தம் போன்றசுபநிகழ்வை நடத்தலாமா?