×

பொத்தனூர் பகுதியில் செயல்படும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

பரமத்திவேலூர், டிச.25: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில், பொத்தனூர் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில், பரமத்திவேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி, பொத்தனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம், இளநிலை உதவியாளர் ஜெயசங்கர், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் அடங்கிய குழுவினர், பொத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட கடைகளில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்வி நிலையங்களில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். இதில் குட்கா பொருட்கள் எதுவும் பிடிபடவில்லை. கடைகளில் தடையை மீறி பயன்படுத்தி பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபாரதம் விதித்தனர்.

The post பொத்தனூர் பகுதியில் செயல்படும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pothanur ,Paramathivellur ,Namakkal District ,Collector ,Uma ,Pothanur Town Panchayat ,Food Safety Officer ,Muthusamy ,Executive ,Officer ,Arumugam ,Dinakaran ,
× RELATED டெம்போ மோதி விவசாயி பலி