×

மே.வங்கத்தில் தாய், தந்தை, சகோதரியை கொன்ற வழக்கு தற்கொலைக்கு முயன்ற ஆசிரியருக்கு மரண தண்டனை

ஹூக்ளி: மேற்குவங்கம் சேர்ந்த பிரமதேஸ் கோசல் ஆசிரியர். இவர் கடந்த 2021ம் ஆண்டு வீட்டில் மணிக்கட்டை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் வீட்டுக்கு விரைந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது வீட்டில் இறந்த நிலையில் கிடந்த ஒரு ஆண், இரண்டு பெண் சடலங்களைமீட்டனர்.

சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து திரும்பிய கோசலிடம், நடத்திய விசாரணையில்இறந்து கிடந்தது கோசலின் தாய் சுப்ரா கோசல், தந்தை ஆஷிம் கோசல் மற்றும் கோசலின் சகோதரி பல்லவி சட்டர்ஜி என்பது தெரிய வந்தது. இவர்கள் மூன்று பேரும் அடிக்கடி பணம் கேட்டு தன்னிடம் தகராறு செய்ததால் 3 பேரையும் கொன்றதை கோசல் ஒப்பு கொண்டார். இதுதொடர்பான வழக்கில் கோசலுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

The post மே.வங்கத்தில் தாய், தந்தை, சகோதரியை கொன்ற வழக்கு தற்கொலைக்கு முயன்ற ஆசிரியருக்கு மரண தண்டனை appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Hooghly ,Pramadesh Ghosal ,
× RELATED மம்தா பிறந்த நாள் முதல்வர் வாழ்த்து