×

கேரள ஆளுநர் ஆரிஃப் கான் மாற்றம்

டெல்லி: கேரள ஆளுநராக இருந்த ஆரிஃப் முகமது கானை பீகார் மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய உள்துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் பல்லா, மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மிசோரம் ஆளுநர் கம்பம்பதி ஹரிபாபு, ஒடிசா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கை, மிசோரம் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். பீகார் மாநில ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post கேரள ஆளுநர் ஆரிஃப் கான் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Governor Arif Khan ,Delhi ,Governor Arif Mohammad Khan ,Governor of Bihar ,Former Union ,Home Secretary ,Ajay Kumar Bhalla ,Governor of Manipur ,Mizoram ,Governor ,Kambampati Haribabu ,Governor of Odisha… ,Dinakaran ,
× RELATED கண்ணூரில் தண்டவாளத்தில் படுத்து...