×

தென்காசி மாவட்ட காவலர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடமாறுதல் எஸ்.பி. சீனிவாசன் நடவடிக்கை

தென்காசி,டிச.24: தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒரு காவல் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணி புரிந்தால் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் காவலர்களில் 3 வருடங்களை நிறைவு செய்து வேறு காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு நேரடி கலந்தாய்வு நேற்று எஸ்பி சீனிவாசன் தலைமையில் நடந்தது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் 71 காவலர்கள் கலந்துகொண்டனர். விருப்பம் தெரிவித்த காவல் நிலையங்களில் பணியிட மாறுதல் வழங்கப்பட்டதால் காவலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post தென்காசி மாவட்ட காவலர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடமாறுதல் எஸ்.பி. சீனிவாசன் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,S.P. Srinivasan ,Tamil Nadu Police ,Dinakaran ,
× RELATED தென்காசியை கலக்கும் போஸ்டர்கள்...