×

மின் கசிவால் பூட்டிய வீட்டில் தீ விபத்து ₹3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் செய்யாறில்

செய்யாறு, டிச. 24: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் வேல் சோமசுந்தரம் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்(40) பைனான்ஸ் ஊழியர், இவருடன் மனைவி செண்பகவல்லி(38) மகள் கனிஷ்கா(5), மகன் ஜஸ்வந்த்(3), மாமனார் நாகேந்திரன்(60), மாமியார் பாக்கியலட்சுமி(55) ஆகியோருடன் வசித்து வருகின்றனர். வீட்டில் அனைவரும் பணி நிமித்தமாக வீட்டை பூட்டிக்கொண்டு வெளியில் சென்றிருந்தனர். வீடு பூட்டி இருந்த நிலையில் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ மளமளவென பரவி கட்டில், பீரோ, டைனிங் டேபிள், பேன் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் மற்றும் பீரோவில் இருந்த 5 கிராம் நகைகள், பட்டுப் புடவைகள் 200 கிராம் வெள்ளி கொலுசுகள் ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டில் புகை வருவதை கண்டு பெருமாளுக்கும், செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ அதிக அளவு கரும்பு புகையுடன் மள மளவென எரிந்ததால் வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம் ஆகியது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.

The post மின் கசிவால் பூட்டிய வீட்டில் தீ விபத்து ₹3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் செய்யாறில் appeared first on Dinakaran.

Tags : Cheyyar ,Perumal ,Vel Somasundaram Nagar ,First Cross Street, Cheyyar town, Thiruvannamalai district ,Senbhagavalli ,Kanishka ,Jaswanth ,Nagendran ,Pakhyalakshmi ,
× RELATED கரும்பு விவசாயிகள், டிரைவர்கள் சாலை...