×

புதிய சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு!

கடலூர்: சுங்கச்சாவடி வழியாக செல்லும் தனியார் பேருந்துகளுக்கு 50 முறை சென்றுவர கட்டணம் ரூ.14,090 என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் இன்று நடைபெற உள்ளது. கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. புதிய சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே கொத்தட்டை பகுதியில் புதியதாக சுங்கச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை பணி இன்னும் நிறைவு பெறாத நிலையில் இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்று பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

The post புதிய சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Private Bus Owner's Association ,Cuddalore ,Chidambarat ,Private Bus Owners Association ,Dinakaran ,
× RELATED புதிய சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு...