×

பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான விமர்சனம் ராகுல் ஜன.7 நேரில் ஆஜராக வேண்டும்: பரேலி நீதிமன்றம் சம்மன்

பரேலி: மக்களவை தேர்தலின்போது ஐதராபாத்தில் பிரசாரம் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பற்றி விமர்சனம் செய்திருந்தார். இதுபற்றி “அரசியல் ஆதாயத்துக்காக சமூகத்தில் வெறுப்பை வளர்க்கும் நோக்கத்துடன் நலிந்த பிரிவினரை ராகுல் காந்தி தூண்டி விட முயல்கிறார்” எனக் கூறி பங்கஜ் பதக் என்பவர் உத்தரபிரதேசத்தில் பரேலி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக வரும் ஜனவரி 7ம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும்” என பரேலி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

The post பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான விமர்சனம் ராகுல் ஜன.7 நேரில் ஆஜராக வேண்டும்: பரேலி நீதிமன்றம் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Bareilly ,Congress ,president ,Hyderabad ,Lok Sabha elections ,Union government ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த புகார்...