தஞ்சாவூர்,டிச.21: தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வழிகாட்டுதலின்பேரில் மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்டில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகளுக்கும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 15 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டன. மேலும், கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
The post தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்பனை appeared first on Dinakaran.