×

அரசு பள்ளிக்கு இருக்கை வழங்கல்

தொண்டி, டிச. 21: தொண்டி செய்யது முகம்மது அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு எஸ்.எம்.சி சார்பில் டெஸ்க் பெஞ்ச் வழங்கப்பட்டது. தொண்டி செய்யது முகம்மது அரசினர் மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிகைக்கு ஏற்ப இருக்கைகள் கிடையாது. இதுகுறித்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் இந்துமத பரிபாலன சபை தலைவர் ராஜசேகர் தலைமையில் டெஸ்க் பெஞ்ச் வழங்கப்பட்டது. ஆனந்தன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை நன்றி கூறினார்.

The post அரசு பள்ளிக்கு இருக்கை வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Thondi ,SMC ,Thondi Seyithu Mohammed Government Higher Secondary School ,Dinakaran ,
× RELATED தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது