×

கோவிலடியில் கொள்ளிடம் ஆற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

 

திருவையாறு, டிச.20: கோவிலடி கொள்ளிடம் ஆற்றில் மூதாட்டி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். திருக்காட்டுப் பள்ளிஅருகே கோவிலடி புதிய பம்ப் ஹவுஸ் அருகில் கொள்ளிடம் ஆற்றில் மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தோகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடலூர் மாவட்டம் வேப்பூர் தெற்கு தெருவை சேர்ந்த அருணாச்சலம் மனைவி நளினி (73) என்பதும், இவர் திருச்சி டவுன்ஷிப் செந்தில்குமார் மனைவி தனலட்சுமி வீட்டில் இருந்தவர் கடந்த 15ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் எங்கு சென்றார் என்று தெரிவில்லை. இதனால் தனலெட்சுமி திருச்சி பி.ஹெச்.எல் போலீசில் புகார் செய்திருந்தார். உடனடியாக அவரை தொடர்பு கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைத்து உடலை காட்டிய பொழுது இறந்தவர் நளினி தான் என்பதை அடையாளம் காண்பித்ததை தொடர்ந்து தோகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

The post கோவிலடியில் கொள்ளிடம் ஆற்றில் மூதாட்டி சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kollidam river ,Koviladi ,Thiruvaiyaru ,Koviladi New Pump House ,Thirukattu School ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவது...