ஏரல், டிச. 20: பழையகாயலில் முகாமிட்டிருந்த வெள்ளமீட்பு குழுவினரை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ சந்தித்து பேசினார். அப்போது வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை பற்றி கேட்டறிந்தார். தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த 12, 13 மற்றும் 14ம் தேதிகளில் கனமழை கொட்டியதில் தாமிரபரணி ஆற்றில் 70 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆற்றங்கரையோர பகுதி மக்கள், பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. மேலும் தமிழக அரசும், வெள்ளமீட்பு குழுவினரை தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தது.
இதில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள பழையகாயலில் வெள்ளமீட்பு குழுவினர் தங்கியிருந்து பொதுமக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இக்குழுவினரை வை. சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் நேரில் சந்தித்து வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது வைகுண்டம் பிடிஓக்கள் சின்னத்துரை, சுரேஷ், பழையகாயல் பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார், தெற்கு மாவட்ட காங். பொருளாளர் எடிசன், இளைஞர் காங். தலைவர் இசைசங்கர், வட்டார தலைவர்கள் ஜெயராஜ், ஜெயசீலன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
The post பழையகாயலில் வெள்ளமீட்பு குழுவை சந்தித்த ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ appeared first on Dinakaran.