×

உரிய அனுமதியில்லாமல் லாரியில் எடுத்து சென்ற 15 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல்: உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் அனுமதியில்லாமல் 15 ஆயிரம் லிட்டர் டீசல் கடத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து டீசல் கடத்தப்பட்டு வருவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துறை இயக்குநர் சீமா அகர்வாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காவல் துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் உத்தரவின் பேரில்சென்னை சரக காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையில் செங்கல்பட்டு உதவி ஆய்வாளர் ரஜித் உள்ளிட்ட காவலர்கள் கொண்ட குழுவினர் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடிய அருகே நேற்றுமுன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த (TN 19 Q 9599) என்ற பதிவு எண் கொண்ட டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த டேங்கர் லாரியில் உரிய அனுமதியில்லாமல் 15,000 லிட்டர் கொள்ளவு கொண்ட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், டீசலை கொண்டு செல்ல எவ்வித அரசு அனுமதியோ ஆவணங்களோ இல்லாமல் டீசல் கடத்தி சென்றது தெரியவந்தது. இந்நிலையில், அந்த லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் பாண்டுரங்கன் என்பவரது மகன் வேலப்பன் (42) ஏழுமலை என்பவரது மகன் கிளினர் ராமு (37) மற்றும் லாரி உரிமையாளர் சாமுவேல் அருண்பாண்டியன் அவரது நண்பர் சாகுல் அமீது உள்ளிட்ட நான்குபேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 15 ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் டீசல் கடத்தப்பட்ட டேங்கர் லாரியை பறிமுதல் செய்து நான்கு பேரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post உரிய அனுமதியில்லாமல் லாரியில் எடுத்து சென்ற 15 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல்: உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Civil Supplies ,Crime Investigation Department Police ,Seema Agarwal ,Chennai ,Dinakaran ,
× RELATED திம்மசமுத்திரம் பகுதியில் லாரியுடன்...