×

கறம்பக்குடி வேளாண்மை அலுவலகம் எதிரே மின்கம்பியில் படர்ந்துள்ள செடி, கொடியை அகற்ற வேண்டும்

கறம்பக்குடி, டிச.19: கறம்பக்குடி உதவி வேளாண்மை அலுவலகம் எதிரே ஆபத்தை எதிர்நோக்கும் வகையில் மின் கம்பியில் படர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே வட்டார வேளாண்மை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த வேளாண்மை அலுவலகம் அருகில் தாழ்வாக மின் கம்பி செல்கிறது. மின்கம்பியை மறைக்கும் அளவிற்கு மின்கம்பிகள் தெரியாத வகையில் செடி, கொடிகள் மின் கம்பி முழுவதும் படர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் எதிர்பாராத விதமாக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளதால் அதன் அருகில் செல்வதற்கும், அலுவலகத்திற்கு நுழைவதற்கும் பணியாளர்கள் அச்சப்படுகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட கறம்பக்குடி மின்வாரிய நிர்வாகம் மின் கம்பி முழுவதும் படந்துள்ள செடி கொடிகளை அகற்றி ஆபத்திலிருந்து காக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் மின்வாரிய அலுவலகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கறம்பக்குடி வேளாண்மை அலுவலகம் எதிரே மின்கம்பியில் படர்ந்துள்ள செடி, கொடியை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karambakudi Agriculture Office ,Karambakudi ,Karambakudi Assistant Agriculture Office ,Regional Agriculture Office ,Karambakudi Panchayat Union Office ,Pudukkottai ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி இளம் பெண்ணை கொன்றது ஏன்?