திருத்துறைப்பூண்டி, டிச. 19: திருத்துறைப்பூண்டி அருகே விதை நெல் சாகுபடி செய்த சம்பாபயிர்களை வேளாண்மை துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 36000 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்று உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையில் ஏற்கனவே பயிர் தூர்கட்டும் நிலையில் சேதமடைத்துவிட்டது. சேதம் குறித்து ஏற்கனவே ஆய்வு பணி முடிந்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்த பெய்து வரும் மழையில் கதிர் வரும் நிலையில் இருந்த பல ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் சாய்த்து விட்டது. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருவலஞ்சுழி கிராமத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விதை பண்ணையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரை வேளாண்மை துறை உதவி இயக்குனர் செந்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உதவி விதை அலுவலர்கள் சாமிநாதன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post திருத்துறைப்பூண்டி அருகே விதைநெல் சாகுபடி செய்த சம்பா பயிர்கள் appeared first on Dinakaran.