×

ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.1.65 கோடி மோசடி கம்போடிய மோசடி கும்பலுடன் தொடர்புடைய 4 பேர் சிக்கினர்: டெபிட் கார்டுகள், மடிக்கணினிகள் பறிமுதல்

சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள மாநில சைபர் க்ரைம் தலைமை அலுவலகத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் புகார் ஒன்று அளித்தார். அதில், மோதிலால் ஓஸ்வாஸ் மற்றும் எஸ்பிஐ செக்யூரிட்டீஸ் என்ற பெயரில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு சிலர் பேசினர். அப்போது 2 நிறுவனங்களில் விவரங்களை இணையதளம் மூலம் காட்டினர். இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தால், அதிக லாபம் கமிஷனாக கிடைக்கும் என்று கூறினர்.

அதை நம்பி 1 கோடியே 65 லட்சத்து 85 ஆயிரத்து 150 ரூபாய் அவர்கள் கூறிய வங்கி கணக்கில் செலுத்தினேன். ஆனால் சொன்னப்படி லாபத்தில் பங்கு தரவில்லை. அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும், என தெரிவித்து இருந்தார். இதையடுத்து, சைபர் க்ரைம் போலீசார், பணம் அனுப்பிய வங்கி கணக்கு விவரங்களை வைத்து விசாரணை நடத்திய போது, சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வரும் முகமது இஸ்மாயில் மற்றும் திருப்பூரில் மறு சுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வரும் அபுதாஹீர் மற்றும் கேசவராஜ், கலீல் அகமது ஆகியோர், ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து, முகமது அஸ்மாயில் மற்றும் அபுதாஹீர், கேசவராஜ் ஆகியோரை கடந்த 6ம் தேதி போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூலம் மற்றொரு நபரான கலீல் அகமது குறித்து விசாரணை நடத்திய போது, கலீல் அகமது கம்போடியாவில் மோசடி கும்பலிடம் பணியாற்றி வருவது தெரியவந்தது. உடனே போலீசார் கைது செய்யப்பட்ட 3 நபர்கள் மூலம் அவரை சென்னைக்கு வரவழைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் கம்போடியாவில் உள்ள மோசடி கும்பலுடன் நேரடியாக தொடர்பில் இருந்து தமிழகத்தில் மோசடி செய்யும் நபர்களின் ஏஜென்டாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ேமாசடிக்கு பயன்படுத்திய டெபிட் கார்டுகள், காசோலைகள், செல்போன்கள், மடிக்கணினிகள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.1.65 கோடி மோசடி கம்போடிய மோசடி கும்பலுடன் தொடர்புடைய 4 பேர் சிக்கினர்: டெபிட் கார்டுகள், மடிக்கணினிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ashok Nagar, Chennai ,Motilal Oshwas ,SBI Securities ,Dinakaran ,
× RELATED சென்னை வியாபாரி மேட்டூரில் தற்கொலை