சிங்கம்புணரி., டிச.17: சிங்கம்புணரி அருகே காளாப்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமணன்(44). பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சண்முகப்பிரியா. கணவன்,மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ரமணன் வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் எஸ்வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்(39). வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊரில் இருந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக வீட்டில் செல்வம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அவரது மனைவி ராஜாத்தி கொடுத்த புகாரின் பேரில், எஸ்விமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இரண்டு பேர் தற்கொலை appeared first on Dinakaran.