×

சோழவரம் அருகே பரபரப்பு கால்பந்து போட்டியில் தகராறு: 2 பேர் காயம்; 5 பேருக்கு போலீஸ் வலை

புழல்: சோழவரம் அருகே நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட தகராறில் 2 பேரை சரமாரியாக தாக்கிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சோழவரம் அடுத்த பெருங்காவூர், காந்தி நகரில் கால்பந்து போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இப்போட்டியில் பெருங்காவூர் அணியும், ஒரக்காடு அணியும் விளையாடிக் கொண்டிருந்தபோது, பெருங்காவூர் அணி தோல்வி அடையும் நிலையில் இருந்ததால், அப்போது பெருங்காவூர் பகுதியைச் சேர்ந்த பரத், வசந்த், லோகேஷ், அபி, மணி ஆகியோர் மதுபோதையில் விளையாட்டு திடலில் இறங்கி தகராறில் ஈடுபட்டனர்.

இதில், தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த ஒரக்காடு அம்பேத்கர் தெருவை சேர்ந்த சுசீந்தர்(22), அதே பகுதியை சேர்ந்த ஜீவன் சக்கரவர்த்தி(19) ஆகிய 2 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சோழவரம் போலீசார், கால்பந்து போட்டியின்போது தகராறில் ஈடுபட்டு தலைமறையான 5 பேரை தேடி வருகின்றனர்.

The post சோழவரம் அருகே பரபரப்பு கால்பந்து போட்டியில் தகராறு: 2 பேர் காயம்; 5 பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Chozhavaram ,Bughal ,Gandhi, Perungavur ,Perungavur ,
× RELATED சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்!