- தென்காசி மாவட்டம்
- தென்காசி
- திருநெல்வேலி
- தூத்துக்குடி
- தென்காசி மாவட்ட ஆட்சியர்
- பொதுத்துறை அமைச்சர்
- ஈ.வி.வேலு
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
- அமைச்சர்…
- தின மலர்
தென்காசி, டிச.16: தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தென்காசியில் நடந்தது. தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வரவேற்றார். கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தென்காசி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில், சாலைகள். தரைப்பாலங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்டவைகளின் சேதாரங்கள் குறித்தும், மழையினால் பாதிக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைகளை உடனடியாக சரி செய்து போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் உடனடியாக சரி செய்ய வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்தும், உயர் மட்டப்பாலங்கள். தரைப்பாலங்கள் மற்றும் மேம்பாலங்களில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் 2021 -22ம் ஆண்டு கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உலக வங்கிக்கடன் உதவி மற்றும் மாநில அரசு நிதி மூலம் திருநெல்வேலி-செங்கோட்டை கொல்லம் சாலையில் 47 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.322 கோடி மதிப்பீட்டில் இருவழித்தடத்தில் இருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் குறித்தும், புளியங்குடி முதல் கழுகுமலை வரை 34 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
The post தென்காசி மாவட்டத்தில் மழையால் சேதமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.