×

பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசின் புதிய அமைச்சரவை நாளை விரிவாக்கம்: 30 பேர் அமைச்சர்களாக வாய்ப்பு

மும்பை: பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசின் புதிய அமைச்சரவை விரிவாக்கம் நாளை நடைபெறுகிறது. 30 பேர் அமைச்சர்களாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடந்த சட்டப் பேரடை தேர்தலில் மொத்தமுள்ள 288 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு ஆளும் பாஜக-சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியை ஈட்டியது. நீண்ட இழுபறிக்கு பின்னர் மும்பையில் கடந்த 5ம் தேதி நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பாஜக சார்பில் முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்றார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், மற்ற அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியை நாளை (டிச. 15) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அமைச்சரவையில் முதல்வர் உள்பட அதிகபட்சமாக 43 பேர் வரை நியமிக்கப்படலாம். மேலும் மாநிலத்தின் 2வது தலைநகரான நாகபுரியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளும் கூட்டணியில் இடம்பெறுள்ள பாஜக, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவார தலைமையிலான தேசியவாத காங்கிரசை சேர்ந்த 30 புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். நாகபுரியில் திங்கள்கிழமை (டிச. 16) முதல் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் ஒரு வார காலம் நடைபெறவுள்ளது.

The post பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசின் புதிய அமைச்சரவை நாளை விரிவாக்கம்: 30 பேர் அமைச்சர்களாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Maharashtra government ,Mumbai ,Bhajaga-Sivasena-Nationalist Congress ,Legislative Assembly ,Maharashtra ,
× RELATED நவ. 25 முதல் இன்று வரை ஓயாத போராட்டம்;...