×

திருமலைநம்பி கோயிலுக்கு செல்லவும் தடை

களக்காடு, டிச. 13: களக்காட்டில் பெய்து வரும் தொடர் மழையினால் ஆறு, கால்வாய்களில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் இதுவரை போதிய மழை பெய்யவில்லை. இதனால் குளங்கள் நிரம்பாததால் விவசாய பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. ஆறு, கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து குறைந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் களக்காடு பகுதியில் மிதமான அளவில் தொடர் மழை பெய்து வருகிறது. மழையினால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால்வாய் (கவுதம நதி) பச்சையாறு, உப்பாறு மற்றும் குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. தொடர் மழையினால் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்வனப்பகுதியில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

The post திருமலைநம்பி கோயிலுக்கு செல்லவும் தடை appeared first on Dinakaran.

Tags : Tirumalainambi ,Kalakadu ,Kalakkad ,Tirumalainambi temple ,Nellai district ,
× RELATED களக்காடு அரசு மருத்துவமனையில்...