- சென்னையின் எப்.சி
- ஹைதெராபாத்
- ISL பொருந்தி
- சென்னை
- எஃப்.சி சென்னை
- சென்னை எஃப்சி
- ISL கால்பந்துப் போட்டி
- தின மலர்
சென்னை: சென்னையில் ஏற்கனவே நடந்த 3 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சென்னையின் எப்சி அணி, நேற்று முன்தினம் இரவு நடந்த கால் பந்து போட்டியில் ஐதராபாத் அணியுடன் மோதியது. முதல் ஐந்து நிமிடங்கள் ஐதராபாத் அணியின் கட்டுப்பாட்டில் போட்டி இருந்ததாக தோன்றியது. அதன் பின், சென்னை அணி வீரர்கள் சிறப்பாக ஆடி போட்டியை தம் பக்கம் திருப்பினர். சென்னையின் லுாகாஸ் பிரம்பில்லா அற்புதமாக கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
அதன் பின், 25வது நிமிடத்தில் ஐதராபாத்துக்கு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பு வீண் செய்யப்பட்டது. பின் இறுதி வரை யாரும் கோல் போடவில்லை. இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியை அடுத்து, சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளது. சென்னை அணி, 4 வெற்றி, 3 டிரா, 5 தோல்விகள் பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் மோகன் பகான் அணி 10 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகளுடன் முதலிடத்திலும், பெங்களூரு அணி 11 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளன.
The post ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்திய சென்னையின் எப்சி appeared first on Dinakaran.